சாலைக் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்: நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

 

இளையான்குடி, டிச.3: இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட் பகுதி கிழக்கு புறத்தில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. சாலைக்கிராமம் வழியாக காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இளையான்குடி வழியாக பஸ்கள் தினந்தோறும் இயக்கப்படுகிறது. ஆனால் கடும் இடநெருக்கடி காரணமாக ஆர்.எஸ்.மங்கலம் விலக்கு ரோடு முதல் மகாலிங்கம் கோயில் பகுதி வரை போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் வடிகால் வசதி இல்லாததால் சாலைக்கிராமத்தில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குகிறது.

கலெக்டர் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அதனடிப்படையில் நேற்று டிஎஸ்பி சிபிசாய், தாசில்தார் கோபிநாத் ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை உதவி உதவி இயக்குநர் செய்யது இப்றாகீம்ஷா, உதவி பொறியாளர் முருகானந்தம் மற்றும் இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில், சாலைக் கிராமம் பஸ் ஸ்டாண்ட் கிழக்கு புறத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அடுத்த கட்டமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் கோபிநாத் தெரிவித்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்