சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு

 

திருப்பூர், ஏப். 15: திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் பயிற்சி பெற்ற லேப் டெக்னீசியன்களை தயார் செய்ய வேண்டி, ஆய்வகத்துடன் கூடிய பயிற்சி மையம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைவர் காந்திராஜன், பொதுச்செயலாளர் முருகசாமி, பொருளாளர் மாதேஸ்வரன், துணைத்தலைவர்கள் பக்தவட்சலம், ஈஸ்வரன், இணைச்செயலாளர்கள் செந்தில்குமார், சுதாகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இந்த பயிற்சி மையம் மூலம் லேப் டெக்னீசியன்களுக்கு குறுகிய கால பயிற்சி சிட்ராவுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவுடன் பயிற்சி பெறுகிறவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்காக திருப்பூரில் உள்ள கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்த உடனே வேலைவாய்ப்பை தேடுகிற மாணவர்களுக்கு வேலையுடன் கூடிய இலவச பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாயமிடுதல் குறித்து டிப்ளமோ படிக்க விரும்பும் பொருளாதார வசதி இல்லாத மாணவர்களை படிக்க வைக்கவும் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு