சாயல்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

சாயல்குடி,செப்.8: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதுகுளத்துர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள சாயல்குடி,முதுகுளத்தூர்,கமுதி மற்றும் அபிராமம் ஆகிய 4 பேரூராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்திரவின் படி சாயல்குடியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடந்த மருத்துவ முகாமிற்கு பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், துணை தலைவர் மணிமேகலை முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் வரவேற்றார்.

முகாமில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சிகளின் ஊழியர்களுக்கு ரத்த பரிசோதனை, சர்க்கரை, ரத்தகொதிப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வியாதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை தேவைபடுவோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு, மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்