சமூக நல்லிணக்க கருத்தரங்கம்

 

தேனி, அக்.31: தேனியில் சமூக நல்லிணக்க பேரவை சார்பில், மிலாது சமூக நல்லிணக்க கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கருத்தரங்கிற்கு தேனி புது பள்ளிவாசல் ஜமாத் துணைத் தலைவர் ஹபிபுல்லாஹ் தலைமை வகித்தார். சாலிடாரிட்டி மாவட்ட தலைவர் சபியுல்லாஹ் வரவேற்றார். அனைவருக்கும் அழகிய முன்மாதிரி முகமது நபி எனும் தலைப்பில் இலக்கிய ஆர்வலர் முத்துக்குமார், சமூக நல்லிணக்க பேரவை துணைத் தலைவர் தேனி ஜாஹிர் ஆகியோரும், கும்பகோணம் ஜோதிமலை இறை பணிக்கூட்ட தலைவர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகளும் சிறப்புரையாற்றினர்.

முடிவில், எஸ்ஐஓ மாநில செயலாளர் முகமது தெளபிக் நன்றி தெரிவித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், தேனி புதுப்பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சர்புதீன், விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், திமுக பிரமுகர் வேல்முருகன், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தேனி வட்ட தலைவர் அபுதாஹீர் ராஜா, சமூக செயல்பாட்டாளர் சின்னமனூர் சாதிக், நேசம் மக்கள் சேவை மைய தலைவர் காதர் பிச்சை, சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகமது சபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை