சபரிமலையில் 16ல் நிறைபுத்தரிசி பூஜை

திருவனந்தபுரம்: சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை 16ம் தேதி நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது உண்டு. நாட்டில் விவசாயம் செழிப்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதையொட்டி புதிய நெற்கதிர்கள் பூஜை செய்யப்படும். இந்த வருடத்துக்கான நிறைபுத்தரிசி பூஜை வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 15ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். 17ம் தேதி ஆவணி மாதம் பிறப்பு என்பதாலும், 21ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதாலும் ஐயப்பன் கோயில் நடை 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை திறந்திருக்கும். இந்த நாட்களில் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுவார்கள்….

Related posts

வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில் இன்ஜின் டிரைவர்கள்: ரயில்வே வாரியம் ஆலோசனை

`வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: போலீசார் அகாடமியில் நெகிழ்ச்சி

எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு விவாதம் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியம்தான்: மீண்டும் சர்ச்சை கிளப்பும் அரசியல் கட்சிகள்