சகோதரர்களை கடத்தி சித்ரவதை பிரபல ரவுடி கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சிவகாமி முதல் தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகமது அஜீஸ் (27), ஜாவித் உசேன் (24). இவர்கள் இருவரையும் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி, போலீசார் சென்று கூறி அழைத்துச்சென்ற ஒரு கும்பல், கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதன்பிறகு அவர்களின் பெற்றோருக்கு போன் செய்து, ‘‘உங்கள் மகன்களை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். 20 லட்ச ரூபாய் கொடுத்தால் விடுவிக்கிறோம்’ என்று மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து அந்த கும்பல் பிடியில் இருந்த சகோதரர்களை மீட்டனர். இதுசம்பந்தமாக 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் கணேஷ் புதுநகர் முதல் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் (எ) மணி (25) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் எருக்கஞ்சேரி லட்சுமியம்மன் நகர் பகுதியில் பதுங்கியிருந்த மணியை நேற்று முன்தினம் கைது செய்தனர். …

Related posts

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது