கோஷ்டி மோதலில் 5 பேர் மீது வழக்கு

சிவகாசி, செப்.8: சிவகாசி அருகே கோஷ்டி மோதல் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி மகன் சற்குணம்(23). இவருக்கும் ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தை சேர்ந்த மதன்குமார், தங்கபாண்டி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதன்குமார், தங்கபாண்டி 2 பேரும் கத்தியால் சற்குணத்தை வெட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போன்று மதன்குமார் கொடுத்த புகாரில் தன்னையும், தன்னுடன் இருந்த தங்கபாண்டி, ஜக்கம்மாள் ஆகியோரை இரும்பு கம்பியால் ச்குணம், பாண்டி, முத்துக்குட்டி ஆகியோர் தாக்கியதாகவும், அதில் தங்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறிய புகாரை தொடர்ந்து சற்குணம் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related posts

கோவில்பட்டியில் 113வது நினைவுதினம் வாஞ்சிநாதன் படத்திற்கு மரியாதை

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நெடுஞ்சாலையில் வைத்துள்ள பேரிகார்டால் விபத்து அபாயம்

தூத்துக்குடி சண்முகபுரம் சவுண்ட் சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து