கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஏஐடியூசி பூ விற்கும் போராட்டம்

 

தஞ்சாவூர், மே24:தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு பூ மற்றும் வளையல் மணி வியாபாரம் செய்பவர்களை விரட்ட கூடாது என கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு பூ விற்கும் போராட்டம் நேற்று ஏஐடியூசி சார்பில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி தெரு வியாபார சங்க சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பும் எதிர்புறமும் கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த பூ மற்றும் வளையல் மணி விற்பவர்களை மாநகராட்சி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் அந்த இடத்தை விட்டு அவர்களை விரட்ட கூடாது என வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பூ மற்றும் வளையல், மணி விற்கும் போராட்டம் நேற்று சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தினை ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் துவக்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, ஏஐடியூசி மாநில செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் சேவையா,மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தெரு வியாபார சங்க கிளை நிர்வாகிகள் கண்ணன், பிரகாஷ், சத்யா, மஞ்சுளா, வெண்ணிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்

துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்த பெண் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் மாஜி படைவீரர்கள் குழந்தைகளுக்கு சார்ந்தோர் சான்று பெற அழைப்பு