கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் அளவீடு

ஓமலூர், நவ.28: ஓமலூர் நகரில், கிழக்கு சரபங்கா நதியையொட்டி ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோட்டை சரபங்கா விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயில் திறந்தவெளியாக உள்ளது. கோயிலுக்கு சொந்தமாக, சுமார் 70 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, கோயிலில் பூஜை செய்து பராமரித்து வந்தவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் காலத்திற்கு பிறகு கோயிலையும் பராமரிக்கவில்லை, நிலத்தையும் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், கோயில் நிலத்தை ஒருசிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த கோயில் நிலத்தை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள், நிலம் அளவீடு செய்யும் தாசில்தார் பாலாஜி, ஓமலூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், நில அளவையர்கள் வந்து, கோயில் நிலத்தை அளவீடு செய்தனர். மேலும், கோயில் நிலத்தில் உள்ள வீடுகளையும் அளவீடு செய்தனர். தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலம் மீட்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்