கோடியூர் அரசு பள்ளிக்கு ₹18 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் விஜய்வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டினார்

நாகர்கோவில், ஜன.11: கோடியூர் அரசு நடுநிலை பள்ளியில் ₹18 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் கட்ட விஜய்வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டினார். முளகுமூடு பேரூராட்சியில் கோடியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகட்டிடம் கட்டி தர வேண்டி ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களின் கல்வியின் அவசியத்தை கருத்தில் கொண்டு தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விஜய்வசந்த் எம்.பி ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனை தொடர்ந்து அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் வரவேற்றார். பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் விஜய்வசந்த் எம்.பி பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், வட்டார தலைவர் பொன்.சாலமன், மூளகுமூடு பேரூர் காங்கிரஸ் தலைவர் நெல்சன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் உட்பட பள்ளி ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு