குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 81 மனுக்களுக்கு உடனடி தீர்வு

தர்மபுரி, ஜன.11: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், நேற்று நடந்த குறைதீர்க்கும் சிறப்பு முகாமில், 81 புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நேற்று நடந்தது. ஏடிஎஸ்பிக்கள் இளங்கோவன், பாலப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து, புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி, மொத்தம் 81 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும், புதியதாக 26 மனுக்கள் பெறப்பட்டது. இதில் டிஎஸ்பிக்கள் நாகலிங்கம், ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சரவணன், எஸ்ஐகள் இளமதி, குப்புசாமி, மணி மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்