கொரோனா 2வது அலை குறித்து கட்டுரைகளை வெளியிட்ட தைனிக் பாஸ்கர் பத்திரிக்கை அலுவலகங்களில் ஐ.டி.ரெய்டு

டெல்லி : கொரோனா 2வது அலையின் கோரதாண்டவம் குறித்து தொடர்ச்சியாக கட்டுரைகளை வெளியிட்டு வந்த தைனிக் பாஸ்கர் பத்திரிக்கை அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மராட்டியம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊழல் தைனிக் பாஸ்கர்  நாளேட்டின் அலுவலகங்களில் அதிகாரிகள் காலையில் இருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்தி நாளேடான தைனிக் பாஸ்கர் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறித்து தொடர்ச்சியாக கட்டுரைகளை வெளியிட்டு வந்தது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நிகழ்ந்த மரணங்கள், ஆக்சிஜனுக்காக நோயாளிகளின் உறவினர்கள் சாலையில் தெரிந்ததை படம் பிடித்து தைனிக் பாஸ்கர் கட்டுரை வெளியிட்டது. கங்கையில் கொரோனா சடலங்கள் வீசப்பட்டதையும் தைனிக் பாஸ்கர் நாளேடு அம்பலப்படுத்தியது. இந்த நிலையில் அந்த நிறுவனம் மீது வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது பத்திரிகை துறை மீதான அச்சுறுத்தல் என்று கண்டனம் எழுந்துள்ளது. மோடி அரசு பத்திரிகை துறை மீது தாக்குதல் நடத்துவதாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான திக் விஜய் சிங் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை மோடி அரசு ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் அவர் சாடியுள்ளார்….

Related posts

தடுமாறும் ஏர் இந்தியா வான்கூவர் விமானம் 22 மணி நேரம் தாமதம்: மீண்டும் மீண்டும் கோளாறு

ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ; பயணிகளுக்கு மனிதர்களை போலவே பதில் தரும் பாட்கள்: வாடிக்கையாளர் சேவையில் புதுமை

அசாமில் கனமழையால் வெள்ளம் 6 லட்சம் பேர் கடும் பாதிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு