கொரோனா நிதியை முறையாக பயன்படுத்தியது தமிழ்நாடு அரசு: ஒன்றிய அரசு அறிவிப்பு!!!

டெல்லி: ஒன்றிய அரசின் கோவிட் நிதியை முறையாக பயன்படுத்திய 5 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது. சுகாதார கட்டமைப்பு பலமாக இல்லாத பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களும், நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. கொரோனா பேரிடரை எதிர்த்து போராடுவதற்காக மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த அவசர கால கோவிட் தடுப்பு நிதியை ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கி வருகிறது. இதில் 2 ஆம் கட்டமாக ரூ.15,000 கோடியை வழங்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், இதுவரை ரூ.16,075 கோடி விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ரூ. 1,679 கோடி மட்டுமே மாநில அரசுகள் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது விடுவிக்கப்பட்ட நிதியில் 27% மட்டுமே மாநில அரசுகள் பயன்படுத்தியுள்ளன. இதில் மகாராஷ்டிர அரசு 1%- க்கும் குறைவாக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் 5% நிதியையும், உத்திரபிரதேசம் 9% நிதியையும், பீகார் 18% நிதியையும், கேரளா 20% நிதியை மட்டுமே பயன்படுத்தியதுள்ளன. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்கள் மட்டுமே 50% விழுக்காட்டிற்கும் அதிகமான நிதியை பயன்படுத்தியிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. டெல்லி அரசு ஒன்றிய அரசு நிதியுடன் மாநிலத்தின் சொந்த நிதியிலிருந்தும் சேர்த்து 138% செலவிட்டு இருப்பதாகவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.      …

Related posts

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கை: அகிலேஷ் யாதவ்.

நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்