கொத்தமல்லி பொங்கல்

செய்முறை: முதலில் அடி கனமான பாத்திரத்தில் 600 மில்லி தண்ணீர் ஊற்றவும். நன்றாக கழுவிய பச்சரிசி, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், 3 தேக்கரண்டி நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து குழைவாக வேக வைக்கவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும். பின்னர் அதை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பொங்கலுடன் கொத்தமல்லி விழுதை சேர்த்து கிளறவும். மீதமுள்ள நெய்யில் முந்திரியை போட்டு பொன்னிறமாக வதக்கி, நெய்யுடன் பொங்கலில் ஊற்றிக் கிளறவும். இப்பொழுது சுவையான கொத்தமல்லி பொங்கல் தயார். …

Related posts

ஆலிவ் எண்ணெய் பயன்கள்

சைனீஸ் காளான் சூப்

சாக்லெட் கப்ஸ்