கொடைக்கானல் பூண்டியில் போக்குவரத்திற்கு பாலம் திறப்பு: மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி

 

கொடைக்கானல், ஜன. 13: தினகரன் செய்தி எதிரொலியாக கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூண்டியில் பாலப்பணியை விரைந்து முடித்து போக்குவரத்திற்கு திறந்து விட்டதால் மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராமங்கள் பூண்டி, கிளாவரை. இவ்வூர்களில் விளைவிக்கப்படும் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல மலைச்சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த மலைச்சாலை பூண்டி பகுதியில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

இதையடுத்து நெடுஞ்சாலை துறை சார்பில் அப்பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடந்தது. இப்பாலம் அமைப்பதற்கு ஏற்ற வகையில் இதனருகில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. கொடைக்கானலில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் இந்த தற்காலிக சாலை மிகவும் மோசமாக சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறி விட்டது. பூண்டி, கிளாவரை கிராமங்களுக்கு செல்லக்கூடிய இந்த தற்காலிக சாலை முற்றிலும் சேதமடைந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து தினகரன் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலை துறையினர் பாலம் கட்டும் பணியினை விரைந்து முடித்து அவ்வழியே போக்குவரத்திற்கு திறந்து விட்டுள்ளனர். இதனால் தற்போது போக்குவரத்து சிரமமின்றி இருப்பதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த தினகரன் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related posts

கார் மோதி 3 பேர் காயம்

ஊர்க்காவல் படை ஊழியர் தூக்குமாட்டி தற்கொலை

அரசன் ஏரியில் பெண் சடலம் மீட்பு