கைதிகளுக்கு நூலகம் திறப்பு

சேலம், மார்ச் 27: சேலம் பெண்கள் சிறையில் உள்ள கைதிகள் படித்து பயன்பெறும் வகையில் நுலகம், தையல்கூடம், கைதிகளின் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் விளையாடுவதற்கு குழந்தைகள் விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முசுந்தரம் திறந்து வைத்தார். மேலும், சிறை வார்டன்களின் குடும்பத்தினர் பயன்படும் வகையில் தையற்கூடத்தையும் திறந்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத், சேலம் மண்டல நன்னடத்தை அலுவலர் சகாய ஆல்பர்ட் உள்பட சிறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது