கேரளாவிற்கு கடத்த முயன்ற 897 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கம்பம், டிச. 1: தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து இருந்து கேரளாவுக்கு குமுளி கம்பம்மெட்டு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிகாலை நேரங்களில் காய்கறி வாகனங்களில் ரேஷன் அரிசி கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாக உத்தமபாளையம் புட்செல் எஸ்ஐ சிவப்பிரகாசத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி மற்றும் பறக்கும் படை குழுவினர் கம்பமெட்டு மலைப்பாதையில் காலை 6 மணியளவில் கம்பமெட்டு மலைப்பாதை 8வது கொண்டை ஊசி வளைவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கம்பத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு வாழைத்தார் ஏற்றி வந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது வாழைத்தாருக்கு அடியில் 36 பிளாஸ்டிக் சாக்கு பையில் மொத்தம் 897 கிலோ ரேஷன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரேசன் அரிசியுடன் பிக்கப் வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரரணையில் கேரளா மாநிலம் நெடுங்கண்டம் பச்சடியைச் சேர்ந்த முகமதுராஜூ (47) என்பதும், கம்பம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் முகமதுராஜூவை கைது செய்தனர். பறிமுதல் செய்த அரிசியை உத்தமபாயைம் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கில் ஒப்படைத்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்