கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 6 பேரில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்: உத்தரகாண்ட் காவல்துறை தகவல்

கேதார்நாத்: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர்கள் என உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. கேதார்நாத்தில் இன்று காலை நடந்த தனியார் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பயணிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்ட் மாநிலம் குப்தகாசியில் இருந்து ஆர்யன் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று பக்தர்களை ஏற்றிக் கொண்டு கேதார் பள்ளத்தாக்கு நோக்கி சென்றது. அப்போது கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, கவுரிகுண்ட் என்ற இடத்தில் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரில் சென்ற 6 பயணிகள் பலியாகினர். தகவலறிந்த பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரும் 21 மற்றும் 22ம் தேதி பிரதமர் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டுக்கு விரைகிறார் ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங்

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டுக்கு விரைகிறார் வெளியுறவு இணை அமைச்சர்

சில்லறை பணவீக்க விகிதம் 4.75%ஆக குறைந்தது: ஒன்றிய அரசு தகவல்