கேதார்நாத் கோவில்: புதிய கமிட்டி அமைப்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற புண்ணியதலங்களான பத்ரிநாத்,கேதார்நாத் உட்பட 51 கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக  ‘சார்தாம்’ தேவஸ்தான போர்டு அமைக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. இது  கோவில்களில் இருக்கும் தங்களுடைய பாரம்பரிய உரிமையை  பறிப்பதாக உள்ளது என கூறி  பூஜாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் கடந்த மாதம் இந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது.இந்நிலையில்,நடைபெற இருக்கும் சட்ட பேரவைதேர்தலை மனதில் வைத்து கோவில்களில் பூஜாரிகளின் உரிமையை பாதுகாக்கும் விதத்தில் பத்ரிநாத்,கேதார்நாத் கோவில்களுக்கு புதிய கமிட்டியை அரசு நியமித்துள்ளது. அதன்படி பாஜ பிரமுகர் அஜேந்திர அஜய் கோவில் கமிட்டி தலைவராகவும்,13 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்….

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்

நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை