குளித்தலை நகர்மன்ற கூட்டம்

 

குளித்தலை, மார்ச் 12: கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி சாதாரண நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா தலைமை வகித்தார். ஆணையர் நந்தகுமார், நகர் மன்ற துணைத் தலைவர் கணேசன், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயில் நடுநிலைப்பள்ளி, கடம்பர் கோயில் நடுநிலைப்பள்ளி, மணத்தட்டை நடுநிலைப்பள்ளி, தேவதானம் துவக்கப்பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை மற்றும் காந்த பச்சை பலகை அமைப்பது. குளித்தலை நகராட்சிக்கு சொந்தமான சத்தியமங்கலம் உரக்கிடங்கில் புதிய தொட்டிய அமைத்தல் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் 5 எச்பி மின் மோட்டார் பொருத்துதல் ஆழ்குழாய் சீரமைத்தல் பழைய அயன் கூரையை சரி செய்தல் மற்றும் பெரியார் நகர் உரை கிடங்கில் உள்ள குப்பை அரைக்கும் இயந்திரத்தை சத்தியமங்கலம் உரக்கிடங்கிற்கு மாற்றி அமைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்திற்கு எதிரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே பொதுமக்கள் நலன் கருதி மின்வாரியத்தின் அனுமதி பெற்று மின்மாற்றியை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பது. குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்தில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது பணிகள் முடிக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே உள்ள அடிமனை வாடகைதாரர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது காலியாக உள்ள இடத்தில் நகராட்சியின் வருவாய் பெருக்கும் வகையில் 10 கடைகள் குறிப்பிட்ட அளவீடு செய்யப்பட்டு கட்டுவதற்கு அனுமதி வழங்குவது. குளித்தலை நகராட்சி எல்லைக்குட்பட்ட 24 வது வார்டில் மலையப்பன் நகர் கிழக்கு பகுதியில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சமுதாய மேடை அமைப்பது உள்பட 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு