குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக பெண் டாக்டரிடம் ரூ.8 லட்சம் அபேஸ்

சென்னை: விருகம்பாக்கம் சாய்பாபா காலனி 3வது ெதருவை சேர்ந்தவர் வள்ளி (52). ஹோமியோபதி டாக்டரான இவர், புதுச்சேரியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருக்கு அறிமுகமான தஞ்சாவூரை சேர்ந்த நிலத்தரகர் செல்வக்குமார் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதன்படி கடந்த 14ம் தேதி வடபழனியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து, சுங்கத்துறையில் பணியாற்றுவதாக ராம்பிராசத் என்பவரை டாக்டர் வள்ளிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது வெளிநாடுகளில் இருந்து கள்ளச்சந்தையில் வந்த தங்கம் என்னிடம் 2 கிலோ இருக்கிறது. எனக்கு அவசர தேவை என்பதால், அதை ₹8 லட்சத்திற்கு தருகிறேன் என்று அவர் கூறியுள்ளார். அதை நம்பிய வள்ளி, ₹7 லட்சத்தை ரொக்கமாகவும், ₹1 லட்சத்தை ஆன்லைன் மூலமாகவும் செல்வக்குமார் மற்றும் ராம்பிரசாத்திடம் கொடுத்துள்ளார். பின்னர் தங்க நகையை கொண்டு வருவதாக கூறி சென்ற இருவரும் மாயமாகிவிட்டனர். அவர்களின் போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீசார் செல்வக்குமாரை பிடித்து விசாரிக்கின்றனர்….

Related posts

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் கைது

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு

17வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 7ம் வகுப்பு பள்ளி மாணவன்: போக்சோ வழக்கு பாய்ந்தது