குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திரண்ட மக்கள் மேல்நிலை துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

திருவாரூர், மே 30: திருவாரூர் மாவட்டத்தில் மேல்நிலை துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பயிற்சி முகாமை முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி துவக்கி வைத்தார். தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களில் மாநில முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதனையடுத்து இவ்வாறு தேர்வு எழுதாத மாணவர்களை அடையாளம் கண்டு தேர்வு எழுதுவதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதாத மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் 1006 மாணவர்கள் மேல்நிலை தேர்வு எழுதவில்லை என அடையாளம் காணப்பட்டு அவர்கள் தேர்வு எழுதுவதற்குரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில் அடுத்த மாதம் 19ம்தேதி மேல்நிலை 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மூலம் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பை முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி துவக்கி வைத்தார்.இதேபோல் வலங்கைமான், குடவாசல், நன்னிலம், கொரடாச்சேரி, மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை என மாவட்டம் முழுவதும் 10 வட்டாரங்களிலும் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை