கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வழக்கறிஞரும், பேரூர் செயலாளருமான துளசி அய்யா வரவேற்றார். மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அணி துணை அமைப்பாளர் பக்கீர் மைதீன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் நாசர், தாமரைச்செல்வன், மாவட்ட பிரதிநிதிகள் முபாரக், மனோகரன், ஒன்றிய பிரதிநிதி சவுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.பியுமான கல்யாணசுந்தரம், தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட துணை செயலாளர் கோவி.அய்யராசு, வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், மாநில அயலக அணி ராம விஜயன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் துரைமுருகன், பாலாஜி, ஹபிபா கனி, சாதிக் பாட்ஷா மற்றும் கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு