குண்டாசில் வாலிபர் கைது

நெல்லை, பிப். 10: பாளை. சிவந்திபட்டி கார்மேகனார் தெருவை சேர்ந்த சந்தனம் மகன் சுப்பிரமணியன் (41). இவர் மீது அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது ஒரு வழக்கில் தாழையூத்து போலீசார் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை எஸ்பி சிலம்பரசன், தாழையூத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் கலெக்டர் கார்த்திகேயனிடம் பரிந்துரைத்தனர். அவரது உத்தரவின் பேரில், சுப்பிரமணியனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று பாளை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை