குட்கா விற்ற 2 பேர் கைது

கரூர்: மாயனூர் டீக்கடைகளில் குட்கா பதுக்கிவிற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் முழுவதும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக தனிப்படை மற்றும் அந்தந்த காவல் நிலைய போலீசார் சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் கரூர் டவுன் மற்றும் மாயனூர் பகுதிகளில் உள்ள ஒரு டீக்கடைகளில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசார்களுக்கு தகவல் வந்தது. இதனைடிப்படையில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கடைகளில் சோதனை நடத்தி, கடை உரிமையாளர்கள் 2 பேர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து 300 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை