கீழக்கரை பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

 

கீழக்கரை, செப். 4: இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினர். ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி அரங்கில் வட்டார அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 17 வயது பிரிவில் ஜமீலாத் ஜெஸ்லா மற்றும் 19 வயது இரட்டையர் பிரிவில் மரியம் ரிஸ்னா, ராஜதனலட்சுமி ஆகியோரும் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவி யரை பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இப்ரா ஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலுலவர்கள் பாராட்டினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்