கிருஷ்ணராயபுரம் அருகே மகா மாரியம்மன் கோயிலில் தூக்குத்தேர் ஊர்வலம்

 

கிருஷ்ணராயபுரம், மே 22: கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி மகா மாரியம்மன் கோயிலில் நேற்று தூக்குத் தேர் ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மகா மாரியம்மன் கோயிலில் வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு. கடந்த 7ம்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தினமும் அதிகாலையில் பக்தர்கள் காவிரியிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர். மேலும் தினமும் உபயதாரர்கள் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று காலை அம்பாளுக்கு பால், தயிர், பழங்கள், பஞ்சாமிர்தம், திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று. பின்னர் அலங்கரிக்கப்பட்ட அம்பாள் தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தால், தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களின் தோளில் தேரினை சுமந்தவாறு கோயிலை சுற்றி வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு