கிராமத்தில் நுழைந்த 10 யானைகள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே பரபரப்பு

குடியாத்தம், ஏப். 14: குடியாத்தம் அருகே கிராமத்தில் நுழைந்த 10 யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள தனகொண்டபள்ளி, சைனகுண்டா, மோர்தானா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்டமிட்டா, டி.பி.பாளையம், கதிர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பயிர்கள் சேதம் அடைந்து வருகிறது. இதனால் வனத்துறையினர் இரவு பகலாக தொடர்ந்து ரோந்து பணயில் ஈடுபட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று குடியாத்தம் அடுத்த டி.பி.பாளையம் கிராமங்களில் 10 காட்டு யானைகள் கூட்டமாக பிளிறியபடி விவசாய நிலங்களுக்கு நுழைய முயற்சி செய்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வன ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு