காலாவதியான 16 கிலோ சிப்ஸ் பறிமுதல்

சேலம், மே 25: சேலம் மெய்யனூர் பைபாஸ் ரோட்டில் 5 தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரில் காலாவதியான சிப்ஸ் விற்பனை செய்யப்படுவதாக சேலம் உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் நேற்று தியேட்டருக்கு சென்று அங்குள்ள கேன்டீன்களில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் காலாவதியான 2.25 லிட்டர் பால், பிரட் 800 கிராம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் காலாவதி தேதி, தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத ஐஸ்கிரீம் 71.880 கிலோ, வெண்ணிலா ஐஸ்கிரீம் 24 லிட்டர், பாப்கார்ன் 7 கிலோ, கேக் 18 கிலோ, சிப்ஸ் 16.080 கிலோ, ஸ்பிரிங் ரோல் 6.600 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட உணவு பொருட்கள் அழிக்கப்பட்டது. தியேட்டர் நிர்வாகத்தினர் மீது உணவு பாதுகாப்பு சட்டம் 2006ன் பிரிவு 52,56,58 படி மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் சிவில் வழக்கு தொடரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு

துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்