கார் டயர் வெடித்து விபத்து திருச்சியை சேர்ந்த 2 எலக்ட்ரீசியன் பலி சுற்றுலா சென்று திரும்பிய போது சோகம்

பழநி, நவ. 16: டயர் வெடித்து கார் டிவைடரில் மோதிய விபத்தில் திருச்சியைச் சேர்ந்த 2 எலக்ட்ரீசியன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோபிநாதன் (28). இவரது நண்பர் திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (27). இருவரும் எலக்ட்ரீசியன்கள். இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த அமீர்பாட்ஷா (26), அகமது அப்துல்லா (28), கோயல் நிஷாந்த் (26) ஆகிய 5 பேரும் காரில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்