காரையூர் பகுதிக்கு தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்

 

பொன்னமராவதி, ஆக.11: பொன்னமராவதி அருகே காரையூர் பகுதிக்கு தனியாக தீயணைப்பு நிலையம், 108ஆம்புலன்ஸ் சேவை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியில் தீயணைப்பு நிலையம், 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. பொன்னமராவதி தாலுகாவில் 42 கிராம ஊராட்சி 200க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இதனால் அவசர தேவைகளுக்கு பொன்னமராவதியில் இருந்து 15கிமீ தூரத்திற்கு மேல் உள்ள காரையூர் பகுதிக்கு செல்வதற்குள் தீவிபத்து எரிந்து முடிந்துவிடுகிறது. அவசர சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் போய் சேருவதற்குள் ஆபத்துகள் ஏற்படும் நிலையுள்ளது.

எனவே காரையூர் பகுதியில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைத்து தீவிபத்துகளை தடுக்க உதவவேண்டும். இதே போல 108 ஆம்புலன்ஸ் வாகனம் அங்குள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வழங்கினால் இப்பகுதியில் ஏற்படும் விபத்து, பிரசவம் மற்றும் வைத்தியத்திற்கு பொதுமக்களை எளிதல் அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கமுடியும் என இப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி காரையூரில் தீயணைப்பு நிலையம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை