காரைக்குடி ராசி டிவிஎஸ் சர்வீஸ் மேளா ரூ.149க்கு 21 பாயிண்ட் செக் அப்: குழும சேர்மன் சந்தியாகு ஆரோக்கியம் தகவல்

 

காரைக்குடி, ஜன. 26: காரைக்குடி ராசி டிவிஎஸ் சார்பில் பாண்டியன் தியேட்டர் எதிரே உள்ள மைதானத்தில் மெகா சர்வீஸ் மேளா துவக்கவிழா நடந்தது. விவேக் கண்ணன் வரவேற்றார். ராசி டிவிஎஸ் நிர்வாக இயக்குநர் எஸ்தர் சந்தியாகு தலைமை வகித்தார். ராசி டிவிஎஸ் குழும சேர்மன் சந்தியாகு ஆரோக்கியம், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி ஏரியா சர்வீஸ் மேலாளர் ஜீவன் ஹூடா ஆகியோர் மெகா சர்வீஸ் மேளாவை துவக்கி வைத்தனர்.

பின்னர் சந்தியாகு ஆரோக்கியம் கூறுகையில், ‘‘காரைக்குடி கோவிலூர் சாலையில் உள்ள ராசி டிவிஎஸ் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அதிரடி சிறப்பு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு ரூபாய் முன் பணத்தில் டூவீலர், மிகக்குறைந்த முன்பணத்தில் வாகனங்களை வாங்கி செல்லும் வசதி, சிறப்பு தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம். தற்போது குறைந்த கட்டணத்தில் சர்வீஸ் வசதி செய்வதற்காக, இதுவரை யாரும் செய்திடாத வகையில் ரூ.149க்கு 21 பாயின்ட் செக் அப் மெகா சர்வீஸ் மேளாவில் வழங்கப்படுகிறது.

இது நாளை மறுநாள் (ஜன.27) வரை நடத்தப்பட உள்ளது. இதில் வாட்டர் வாஷ், பாலிஷ் உள்பட பல்வேறு சேவைகள் வழங்கப்படும். தவிர எக்ஸ்சேஞ் வசதி மற்றும் வாகனம் வாங்குபவர்களுக்கு ரூ.5000 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். தினமும் குலுக்கல் முறையில் 3 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படும். வாடிக்கையாளர்களின் திருப்தியே எங்களின் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்’’ என்றார்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு