காதலை ஏற்க மறுத்ததால் காதலி சுட்டுக் கொலை: காதலன் வெறிச்செயல்

மீரட்: உத்தரபிரதேச மாநிலம் மீரட் அடுத்த நரங்பூர் ஜடோலா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷிவானி (19) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த ஷிவானியிடம், தன்னை காதலிக்கும்படி ராஜேஷ் குமார் வற்புறுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஷிவானியை காதலன் ராஜேஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷிவானியை பார்த்து சிரித்துவிட்டு, தனது துப்பாக்கியை வானத்தை நோக்கி காட்டினார். பின்னர் அங்கிருந்து தலைமறைவானார். சம்பவம் குறித்து துணை எஸ்பி (மீரட்) பூனம் சிரோஹி கூறுகையில், ‘ஷிவானியும் ராஜேஷ் குமாரும் ஒரே பகுதியில் வசித்து வந்தனர். இருவருக்கும் காதல் இருந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராஜேஷ் குமாருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையறிந்த ஷிவானி, ராஜேஸ்குமாரிடம் விலகி இருக்க ஆரம்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்க வாய்ப்புள்ளது. தலைமறைவான ராஜேஷ்குமாரை தேடி வருகிறோம்’ என்றார். …

Related posts

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது