கழிவுநீர் கால்வாய் இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்

திருவாடானை, அக்.18: திருவாடானையில் வடபகுதியில் எல்கே நகர் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக மக்கள் திருவாடானை நகர் பகுதிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிறு மழை பெய்தாலும் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் ஓடுவதற்கு வழியில்லை. காரணம் சாலையின் பக்கவாட்டில் கழிவுநீர் கால்வாய் எதுவும் அமைக்கப்படவில்லை.

இதனால் எப்போது மழை பெய்தாலும் ஒரு வாரம் பத்து நாட்கள் தண்ணீர் வெளியேறாமல் அப்படியே தேங்கிக் கிடக்கும். இதனால் நடந்து செல்பவர்களும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து எல்கே நகர் மக்கள் குழுக்களில் இந்த சாலையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிரந்தரமாக தண்ணீர் ஓடுவதற்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்