கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

அவிநாசி: அவிநாசி அருகே உப்பிலிபாளையத்தில் இரும்பு கழிவுகளை கொட்ட வந்த லாரியை கிராமமக்கள் நேற்று சிறைபிடித்தனர்.உப்பிலிபாளையம் ஊராட்சி பகுதியில், மர்ம நபர்கள் இரும்பு கழிவுகளை கொண்டு வந்து நீண்டகாலமாக கொட்டி வந்தனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில், இரும்பு கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். தகவலறிந்த சம்பவயிடத்துக்கு வந்த போலீசார், வருவாய்த்துறையினர், எச்சரிக்கை விடுத்து, உரிய அறிவுரை வழங்கி, கழிவுகளை கொட்ட வந்த லாரியை திருப்பி அனுப்பினர்.

Related posts

வாசகர் வட்ட கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

₹6.25 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை