கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்: கூலிப்படையை ஏவி கணவனை கொல்லமுயன்ற மனைவி கைது

தண்டையார்பேட்டை: சென்னை தீவுத்திடல் அருகே உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அக்பர் பாஷா (28), பர்மா பஜார் பகுதியில்  திரைப்பட சி.டி மற்றும்  சீன பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி நாகவல்லி (எ) யாஸ்மின் பானுவை காதலித்து, கடந்த  6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நாகவல்லிக்கு, ரியாஸ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அக்பர் பாஷா, மனைவி நாகவல்லியை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால், அக்பர் பாஷா தனது மனைவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த நாகவல்லி, கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி,   தனக்கு தெரிந்த தாரணி என்பவர் உதவியுடன் கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்துக்கட்ட கூறியுள்ளார். அதன்படி, முத்துசாமி பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு அக்பர் பாஷா நடந்து சென்றபோது, அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. படுகாயமடைந்த அக்பர் பாஷாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக பூக்கடை போலீசார் கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நாகவல்லியை கைது செய்தனர்.  தப்பி ஒடிய கூலிப்படையை தேடி வருகின்றனர்….

Related posts

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது

கோவையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம் தொழிலதிபரிடம் ஹவாலா பணமா? காரை மறித்து கொள்ளை முயற்சி: ஆயுதங்களுடன் தாக்கிய ராணுவ வீரர் உட்பட 4 பேரிடம் விசாரணை

விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம் பாலியல் தொழிலில் ஈடுபடும்படி நிர்பந்தித்த காதலன் கொலை: தப்பி ஓடிய காதலி கைது