களக்காட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

களக்காடு, ஏப்.17: களக்காட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் மணிசூரியன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுப்பினர் சேர்க்கையைத் துவக்கிவைத்தார். இதில் ஞானதிரவியம் எம்பி, மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கோசல், ஒன்றியச் செயலாளர்கள் களக்காடு வடக்கு செல்வகருணாநிதி, நாங்குநேரி மேற்கு சுடலைக்கண்ணு, களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணைத்தலைவருமான ராஜன், நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜின்னா, மாவட்ட பிரதிநிதி முத்துராஜ், நகரச் செயலாளர்கள் ஏர்வாடி அயூப்கான், திருக்குறுங்குடி கசமுத்து, ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்