கல்வி ஊக்கத் தொகை கேட்டு மாணவர்கள் தர்ணா போராட்டம்

 

திருச்சி, ஏப்.26: கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படாததால் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பெரியார் ஈவேரா அரசு கலைக் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மற்றும் இதர மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். ஆனால் அகாடமிக் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையிலும் விரைவில்

தேர்வு நடைபெற உள்ள சூழலிலும், இதுவரை மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படாததால் நேற்று காலை விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் இதுவரை கல்வி ஊக்கத்தொகை தொகை வழங்கப்படாததால் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுனர். தகவல் அறிந்த கேகேநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்ைத நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை