கலெக்டர் அலுவலகம் முன்பாக திருமலாபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன. 5: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அடிப்படை வசதி கேட்டு தேனி கலெக்டர் அலுவலகம் வந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் திருமலாபுரம் ஊராட்சியில் பாலசமுத்திரம் கிராமம் உள்ளது.இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது, பாலசமுத்திரம் கிராமத்திற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாக்கடை வசதி, தார் சாலை , தெரு விளக்கு, பெண்கள் கழிப்பிட , வடிகால் வசதி.

உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் செய்தி தரவில்லை. இது குறித்து பலமுறை மனு அளித்தும் பலனில்லை என்பதால் தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். இதனையடுத்து, ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, கிராம மக்கள் தங்கள் போராட்டததை வாபஸ் பெற்றனர். இப்போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்