கலெக்டர் அலுவலகத்தில் பட்டா வழங்க கோரி பொதுமக்கள் மனு

 

திருச்சி, ஜன.10: திருச்சி மண்ணச்சநல்லூர் மேல சீதேவி மங்கலம் பகுதியில் உள்ள கம்மாள தெரு,போராளி இல்லம் போன்ற பகுதிகளில் கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நூறு குடும்பங்களுக்கு பத்திர ஆவணங்களின்படி நத்தம் சர்வே எண்ணின் அடிப்படையில் செட்டில்மெண்டில் நடந்த தவறான குளறுபடியால் 100 குடும்பங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை.

அதில் கடந்த 2012 ம் ஆண்டு வரை நத்தம் என இருந்ததை அதிகாரிகள் அரசு புறம்போக்கு என திருத்தம் செய்துள்ளதோடு, இந்நாள் வரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் 5.73 ஹெக்டேர் இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு அந்த இடத்தை முறையாக உட்பிரிவு செய்து நத்தம் பட்டா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனக்கூறி சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு