கறம்பக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

கறம்பக்குடி, ஏப்.14: நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கபட்டதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகளில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்களால் அனுமதியின்றி பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்ற அடிப்படையில் பல்வேறு பறக்கும் படை குழுவினர் தேர்தல் அலுவலர் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கறம்பக்குடி அருகே உள்ள அம்மானிப்பட்டு பூசாரி தெருவில் கறம்பக்குடி -தஞ்சாவூர் செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தேர்தல் அலுவலர் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த சுந்தர வடிவு தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இந்த வாகன சோதனையில் பறக்கும் படை காவலர் ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு