கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி கிராமத்தில் புதிய மின் மாற்றி திறப்பு விழா

 

கறம்பக்குடி, மார்ச் 14: கறம்பக்குடி அருகேயுள்ள திருமணஞ்சேரி கிராமத்தில் கூடுதல் திறன் கொண்ட புதிய மின் மாற்றி திறப்பு விழா நடைபெற்றது.கறம்பக்குடி அருகேயுள்ள திருமணஞ்சேரி கிராமத்தில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி மக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் திறன் கொண்ட புதிய மின் மாற்றி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற திமுக உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா கலந்துகொண்டு தலைமை வகித்து புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.
கறம்பக்குடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவ பாஞ்சாலன் மற்றும் என்ஆர் பரிமளம், பட்டத்தி காடு முன்னாள் ஊராட்சி தலைவர் முத்தையா, திருமணஞ்சேரி ஊராட்சி தலைவர் பிரபு காந்தி, மயில்வாகனன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்