கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை இளைஞர்கள் முற்றுகை

 

கறம்பக்குடி, மார்ச் 2: கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மாங்கோட்டை ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் விநியோகம் செய்து வந்த ஆழ்குழாய் கிணறு மோட்டார் பழுதடைந்ததன் காரணமாக குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது.

15 நாட்களாகியும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் நேற்று காலை குடிநீர் கேட்டு மாங்கொட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நாளை உறுதியாக கண்டிப்பாக மோட்டார் பழுது பார்க்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா ரத்தினம் உறுதி அளித்தார். இதையடுத்து இளைஞர்கள் தங்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்