கறம்பக்குடியில் விவசாய தோட்டத்தில் வசித்த விஷ வண்டுகள் அழிப்பு

 

கறம்பக்குடி, டிச.30: கறம்பக்குடி தெற்குகாடு தெற்கு செட்டித்தெருவில் விவசாய தோட்டத்தில் கூடுகட்டி வசித்த விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு காடு தெற்கு செட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் விஷ வண்டுகள் இருப்பதாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ரமேஷ் தோட்டத்தில் வசித்த விஷ வண்டுகளை தீயணைப்பு நிலைய கருவிகள் கொண்டு அழித்தனர். பொதுமக்களுக்கும், தோட்டக்காரர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விஷ வண்டுகளை அழித்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்