கரூர்- மூக்கணாங்குறிச்சி சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

 

கரூர், மே 22: கரூரில் இருந்து முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் நலன் கருதி கூடுதலாக வேகத்தடை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திண்டுக்கல் சாலையில் வெள்ளியணை செல்லும் சாலையில், வெங்ககல்பட்டி மேம்பாலம் இறக்கத்தில் இருந்து இடதுபுறம் முக்கணாங்குறிச்சி போன்ற பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது.

குறுகிய நிலையில் உள்ள இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. இந்நிலையில், சாலையில் அதிகளவு வளைவுப் பகுதி உள்ள நிலையில், வேகத்தடை அமைக்காத காரணத்தினால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

எனவே, இந்த சாலையில் வளைவு பாதைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிச் சாலையை பார்வையிட்டு தேவையான இடத்தை பார்வையிட்டு வேகத்தடை அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு