கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி

அரவக்குறிச்சி, மார்ச் 26: கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இது குறித்து மாவட்ட விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாவட்ட தலைவர் ஈசநத்தம் செல்வராஜு தெரிவித்ததாவது: தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் மார்க்கெட்களுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தை பொறுத்து தேவை குறைந்து கொள்முதல் செய்ய வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் தேங்காய்
விலை கடுமையாக சரிவடைந்துள்ளது.

50 ரூபாய் வரை விற்ற தேங்காய் தற்போது 10 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலை உள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வாக தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு மதியம் தேங்காய் துண்டு அல்லது தேங்காய் பாலை மதிய உணவுடன் சேர்க்க வேண்டும். மேலும் தேங்காய் எண்ணை மற்றும் தேங்காய், தேங்காய் கொப்பரை, தேங்காய் எண்ணையை விவசாயிகளிடத்தில் நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் வினியோகம் செய்தால்,தேங்காய் விலை கடும் ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் இழப்பை ஈடு கட்டலாம். எப்போதும் சீரான விலையும் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி