கரூர் அருகே அதிக வட்டி தருவதாக ரூ.1.27 கோடி மோசடி பைனான்சியர் கைது மனைவிக்கு வலை

கரூர்: கரூரில் அதிக வட்டி தருவதாக 27 நபர்களிடம் 1 கோடியே 22 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் டெபாசிட் வாங்கிக் கொண்டு திருப்பித் தராத பைனாசியர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு விவிஜி நகர் காமராஜ் நகரை சார்ந்தவர் நர்மதா. இவர்களது குடும்ப நண்பர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி மணிமேகலை. கடந்த 2019ம் ஆண்டு நர்மதாவை தொடர்பு கொண்ட கணவன், மனைவி இருவரும் கரூர் பேருந்து நிலையம் அருகில் ஏகே பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்களிடம் பணம் டெபாசிட் செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியும், கட்டாயப் படுத்தியும் 5 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

இதே போன்று 27 நபர்களிடம் 1 கோடியே 22 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் டெபாசிட் வாங்கியுள்ளனர். காலக் கெடு முடிந்தும் பணம் முதலீடு செய்தவர்களுக்கு திருப்பி வழங்கப்படவில்லை. பலமுறை கிருஷ்ணமூர்த்தியை நேரிலும், போனிலும் தொடர்பு கொண்டும் பணம் திருப்பி தரப்படாததால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரினை பெற்றுக் கொண்ட போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது மனைவி மணிமேகலையை போலீசார் தேடி வருகின்றனர். பைனான்ஸில் முதலீடு செய்தவர்கள் 27 பேரும் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் என கூறப்படுகிறது. பலரும் தங்களுடைய சேமிப்பு மற்றும் தனிநபர் கடன்களை பெற்று பைனான்ஸில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்ததாக போலீசார் புலம்பி வருகின்றனர்.

Related posts

ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ்

கல்லூரி வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது