கரூரில் சின்டெக்ஸ் தொட்டி அருகே பழுதான சாலையால் மக்கள் அவதி

 

கரூர், மே 24: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் சின்டெக்ஸ் தொட்டி அருகே பழுதடைந்த நிலையில் உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மன்நகரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அதிகளவு வாகன போக்குவரத்தும் இந்த சாலையின் வழியாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதிச் சாலையில் மக்கள் பயன்படுத்தும் வகையில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த சின்டெக்ஸ் தொட்டி அருகில் செல்லும் சாலை மிகவும் மோசமாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், குறிப்பிட்ட தூரம் வரை சாலை குணடும், குழியுமாக உள்ளது. இதை விரைந்து சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சாலையை பார்வையிட்டு விரைந்து சீரமைத்து எளிதான வாகன போக்குவரத்து நடைபெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்

ஷேர் மார்க்கெட்டில் இரட்டிப்பு லாபம் என போலீஸ்காரரிடம் பணம் பறிப்பு: மோசடி நபர்களுக்கு வலை

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம்: மாநகராட்சி தகவல்