கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தக்காளி செடிகளை தாக்கும் வெள்ளைப் பூச்சி: விவசாயிகள் கவலை

 

கம்பம், பிப். 11: கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தக்காளிச் செடிகளை தாக்கும் வெள்ளைப் பூச்சிகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கம்பம் மற்றும் கம்பத்தை சுற்றியுள்ள கூடலூர்,உத்தமபாளையம், சின்னமனூர், ஓடைப்பட்டி மற்றும் தேவாரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. இரண்டு மாத கால பயிரான தக்காளி செடிகளில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் மட்டும் அதிக அளவில் வெள்ளை பூச்சிகள் தாக்குதல் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஐந்து நாளுக்கு ஒருமுறை மருந்து தெளித்தாலும் வெள்ளைப் பூச்சிகள் இனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என கவலையடைந்துள்ளனர்.

தக்காளி விளைச்சல் அடைவதற்கு முன்பாகவே தக்காளி செடிகளை வெள்ளை பூச்சிகள் தாக்கி இலைகளை பழுதாக்கி விளைச்சல் இல்லாமல் செய்கின்றன. இதனால் தக்காளி விளைச்சல் வெகுவாக குறைந்து விட்டதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர் . மேலும் ஒட்டன்சத்திரம் ,தாராபுரம் ஆகிய ஊரில் இருந்து தக்காளி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விற்பனைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தக்காளியின் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. வெளிமார்க்கெட்டில் தக்காளி ரூ.40 வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு