கம்பத்தில் நகர் மன்ற அவசரகூட்டம்

கம்பம், மார்ச் 6: கம்பம் நகர் மன்ற அவசர கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேர்மன் வனிதாநெப்போலியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார், ஆணையாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் முருகன் மற்றும் சாதிக் ஆகியோர் பேசுகையில், “கம்பத்தில் ஹோட்டல்களில் ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்து நிலையத்திற்குள் சென்று பொதுமக்கள் பஸ் ஏறி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், நகர் முழுவதும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்’’ என்றனர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு ஆணையாளர் வாசுதேவன், பொறியாளர் அய்யனார், சுகாதார அலுவலர் அரசகுமார் உள்பட அதிகாரிகள் பதிலளித்தனர். பின்னர் சேர்மன் பேசுகையில், `கவுன்சிலர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும்’ என்றார்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு